அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தவுள்ளதற்போது செயற்படும் எட்டு மாகாணசபைகளும், சிறிலங்காவின் ஆளும்கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற போதிலும், 13வது திருத்தத்தை ஒழிப்பதற்கு எதிராக இவற்றில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.13வது திருத்தத்தை ஒழிக்கக் கூடாது சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற மாகாண முதல்வர்களும், உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளனர்.
இந்த தீர்மானம் வடமேல் மாகாணசபையினால் தயாரிக்கப்பட்டு, அதில் மாகாண முதல்வர் அதுல விஜேசிங்கவும் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தத் தீர்மானம் மீதான விவாதத்தை நடத்துவதற்காக வடமேல் மாகாணசபையின் சிறப்புக் கூட்டம் வரும் டிசம்பர் 3ம் நாள் இடம்பெறவுள்ளது.
இந்த தீர்மானம் ஏனைய மாகாணசபைகளிலும் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, பெரும்பாலான மாகாண முதல்வர்கள் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் விருப்பம் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக