இந்தியா எப்போதும் தனது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே நடவடிக்கை மேற்கொள்ளும். அதிகாரம் பெறும் நோக்கிலோ அல்லது பிராந்திய வல்லரசாகும் கொள்கையிலேயோ நாம் ஒருபோதும், செயற்படவில்லை என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா நேற்றுத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சப்புகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்புச் சேவைகள் பயிற்சி கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார் இந்தியத் தூதர் அசோக் கே.காந்தா. "இந்தியாவின் வெளிநாட்டுப் பாதுகாப்புக் கொள்கை" என்ற தொனிப் பொருளில் அவர் ஆற்றிய உரையில் இந்தியாவுக்கு பிராந்திய வல் லரசாகும் எண்ணம் இல்லை என்பதைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் ஆரம்பம் தொட்டே இருந்து வருகின்றன. கலாசார ரீதியிலும், பாதுகாப்புத்துறைசார் உறவுகளும் இரு நாடுகளிடையேயும் தொடர்ந்து பேணப்படுகின்றன. ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்காக அல்லது ஒரு நாட்டு அரசின் கோரிக்கையின் பேரில் அன்றி, வேறு எந்த நடவடிக்கைகளுக்காகவும் இந்தியா தமது இராணுவத்தை நாட்டுக்கு வெளியே பயன்படுத்தவில்லை.
தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் பொருட்டே எப்போதும் இந்தியா செயற்பட்டுள்ளது. ஒரு போதும், அதிகாரம் பெறும் நோக்கிலோ அல்லது பிராந்திய வல்லரசாகும் கொள்கையிலேயோ செயற்படவில்லை என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக