வெள்ளி, 2 நவம்பர், 2012

இந்த நாட்டு மக்களின் இறைமையைப் பாகாக்கும் நோக்கில்தான் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை

 நாட்டு மக்களின் இறைமையை காக்கவே பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றப்பிரேரணை
இந்த நாட்டு மக்களின் இறைமையைப் பாகாக்கும் நோக்கில்தான் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு இன்று (01) தகவல் ஊடக அமைச்சில் நடைபெற்றபேது அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எவை என்பதை நான் இப்போது கூறமுடியாது. விசாரணைகள் நடைபெறும்போது அதனை அறிந்துகொள்ளமுடியும்.
ஒரு குற்றவியல் பிரேரணையை பாராளுமன்றம் ஏற்பதற்கு 75 உறுப்பினர்கள் கையொப்பமிட்டாலே போதும். ஆனால் இந்தப் பிரேரணைக்கு நூற்றுக்கும் அதிகமான உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். நானும் கையெழுத்திட்டேன்.
இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக