வியாழன், 8 நவம்பர், 2012

தமிழ் இளைஞர்களுக்கு ரகசியமாக வழங்கப்பட்ட ஆயுதப்பயிற்சி குறித்து பாதுகாப்பு தரப்பு விசனம்

சிங்களமோ, ஆங்கிலமோ பேசத் தெரியாத 17 தமிழ் இளைஞர்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் தனிப்பட்ட உதவியாளரின் கண்காணிப்பின் கீழ், ரகசியமாக வழங்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதப்பயிற்சி குறித்து பாதுகாப்பு தரப்பினர் விசனம் வெளியிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி தமிழ் இளைஞர்களுக்கு ரகசியமாக வழங்கப்பட்ட ஆயுதப்பயிற்சி குறித்து பாதுகாப்பு தரப்பு விசனம்வெளியிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல், நவம்பர் 2 ஆம் திகதி வரை இந்த ஆயுதப்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அந்த பயிற்சிகள் கட்டுக்குறுந்த அதிரடிப்படை முகாமில் வழங்கப்பட்டுள்ளது.

சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் உரையாட முடியாத இந்த இளைஞர்களுக்காக மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரும், அவர்களுடன் சென்றுள்ளார். கோத்தபாயவின் விசேட உத்தரவின் பேரில் எனக் கூறி, அவரது தனிப்பட்ட உதவியாளரான கர்ணல் ஜயந்த ரத்நாயக்கவே இவர்களை கட்டுக்குறுந்த அதிடிப்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜயந்த ரத்நாயக்க, கோத்தபாயவின் நம்பிக்கைகுரிய இராணுவ அதிகாரியாவார்.

பயிற்சியளிக்கப்பட்ட 17 பேரும் போருக்கு பயற்சி வழங்கப்பட்டவர்கள் போல்,உடல் வாக்கு காணப்பட்டுள்ளது. அத்துடன் ரி 56 ரக துப்பாக்கி குறித்து சிறந்த பயிற்சிகளை அவர்கள் ஏற்கனவே பெற்றிருந்த போதிலும், அதிரடிப்படை முகாமில் வைத்து, இலகு ரக துப்பாக்கிகள் மூலமே இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் கையெழுத்திட தனியான ஆவணம் இருந்ததுடன், இதன் மூலம் அவர்கள் ஏதேனும் கொடுப்பனவுகளை பெறும் நபர்கள் என உறுதியாகியுள்ளது.

அதேவேளை இவர்கள் கே.பியின் பாதுகாவலர்கள் என கர்ணல் ஜயந்த ரத்நாயக்க கூறியுள்ளார். கே.பிக்கு இதுவரை இராணுவத்தினரே பாதுகாப்பு வழங்கி வந்த நிலையில், சிங்களத்தில் ஒரு வார்த்தைக் கூட பேச முடியாத தமிழ் இளைஞர்கள் அவரது பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் விசேட படைப்பிரிவின் கர்ணலான ஜயந்த ரத்நாயக்க, அவர்களுக்கு பயிற்சிகளை வழங்க முடிந்த நிலையில், ஏன் ரகசியமான முறையில் அதிரடிப்படை முகாமில் வைத்து பயிற்சி வழங்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எவ்வாறாயினும் இரணைமடு பிரதேசத்தில் உள்ள கே.பியின் பாதுகாப்பு இவ்வாறான தமிழர் இளைஞர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இவர்களை பயன்படுத்த தயாராகி வரலாம் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக