
யுத்தம் நிறைவடைந்து 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனினும் வடக்கின் அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் அமைந்துள்ள இந்து ஆலயங்களை தரிசிப்பதற்கு ஏற்ற சூழல் அங்கு இதுவரையில் தோற்றுவிக்கப்படவில்லை.
அரசாங்கத்தால் இதனை ஏன் நிவர்த்திக்க முடியாதுள்ளது என ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ் நேற்று சபையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் அமைந்துள்ள இந்துக்கோவில்களை தரிசிப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படாத நிலையே காணப்படுவதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக