வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சின்னத்துரை விக்னேஸ்வரனை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கபுலி உத்தரவிட்டார்.
அடகு மீட்கப்பட்டாத நகைகளை வாங்கி விற்பவரான சின்னத்துரை விக்னேஸ்வரன், அவருக்கு தெரிந்த ஒருவரால் கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி கொட்டிகாவத்தைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.இந்த சந்தேகநபருடன் விக்னேஸ்வரனை பேசிக்கொண்டிருந்த போது, சந்தேகநபர் விக்னேஸ்வரனின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை நாஓயாவிற்கு கொண்டு சென்ற சந்தேகநபர் அடந்த காட்டினுள சடலத்தை வீசியுள்ளார்.
குறித்த சடலம் நானுஓயா பொலிஸாரினால் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, தனது கணவன் காணமல் போனதாக இறந்தவரின் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இறந்தவரின் தொலைபேசி அழைப்புக்களை ஆராய்ந்த பொலிஸார் கொட்டிகாவத்தையை சேர்ந்த மொஹமட்ட அஸ்மி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது பல மர்மங்கள் வெளியாகியுள்ளன.
இறந்தவரிடமிருந்த 3.3 மில்லியன் ரூபாவை கொள்ளையடிப்பதற்காகவே இந்த கொலையை மேற்கொள்ளப்பட்டுள்மை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக