திங்கள், 12 நவம்பர், 2012

வெற்றி FM நிறுவனத்திற்கு எதிராக வழக்கு


பணி நிறுத்தம் செய்யப்பட்ட வெற்றி FM வானொலியின் முன்னாள் பணிப்பாளரும் அவருடன் பணி நிறுத்தம் செய்யப்பட்ட 6அறிவிப்பாளர்களும் காரியதரிசி ஒருவரும் என மொத்தமாக 8 பேர், தமக்கு வழங்கப்படவேண்டிய பலமாத சம்பளப் பணத்தை வழங்கவேண்டும் எனவும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரி, ஊழியர் நியாய வழக்காடு மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர்.

இந்த வழக்கினை தாக்கல் செய்வதற்காக, புறக்கணிக்கப்பட்ட லோஷன் தலைமையிலான வெற்றி FM வானொலி ஊழியர்கள் 7 பேரும் இன்று காலை கொழும்பு நாரேன்பிட்டியில் உள்ள ஊழியர் நியாய வழக்காடு மன்றத்திற்கு சென்றுள்ளனர்.

இதேவளை பணி நிறுத்தம் செய்யப்பட்ட முன்னாள் அறிவிப்பாளர்கள் போராட்டம் நடத்திய இம்மாதம் 1 ஆம் திகதிமுதல் பணிக்கு வழமை போல் சென்ற பலரும் கடந்தவாரம் கட்டாய பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக