திங்கள், 12 நவம்பர், 2012

அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான கெடுபிடிகள் அதிகரிப்பு! அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான கெடுபிடிகள் அதிகரிப்பு!

இலங்கையின் வடபுலத்தில் செயற்பட்டு வரும் அரசசார்பற்ற அமைப்புக்கள் மீதான நெருக்குவாரங்கள் என்றுமில்லாத வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போர்க்குற்ற விவகாரங்களில் அரசசார்பற்ற அமைப்புக்களே முன்னின்று தகவல்களை திரட்டி வருவதாக அரசு சந்தேகம் கொண்டுள்ளமையினால் இக்கெடுபிடிகள் தலைதூக்கியுள்ளது.பெரும்பாலான யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் நாளாந்தம் படையினருக்கு தமது அன்றாட அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.நாளாந்தம் தமது அலுவலகத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் விபரங்கள் பற்றி கூட தகவல்களை சமர்ப்பிக்க தமக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.சில வேளைகளினில் அலுவலகத்தினில் கூடுதலாக துவிச்சக்கரவண்டிகள் நின்றால் கூட விளக்கமளிக்க வேண்டியிருப்பதாக அத்தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
தொடரும் இத்தகைய சூழல் அரச சார்பற்ற நிறுவனங்களை முற்றாக முடக்கவிடலாமென அவை அச்சம் வெளியிட்டுள்ளன.ஏற்கனவே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியினில் செயற்பட்டு வரும் உள்ளுர் அரசசார்பற்ற அமைப்புக்கள் தமது பணிகளை முன்னெடுக்க ஏதுவாக ஒன்றிணைந்து செயற்பட இணையமான்றை நிறுவ முற்பட்டன.எனினும் அந்நடவடிக்கைகளுக்கு வன்னி இராணுவ தலைமையகம் தடை போட்டுவிட்டது.யாழ்ப்பாணத்தினில் 47 இற்கும் மேற்பட்ட அமைப்புக்களது கூட்டிணைவான இணையம் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பகிரங்கமாக செயற்படமுடியாதவாறாகவுள்ளது.
அரசு தொடர்ச்சியாக அரசசார்பற்ற அமைப்புக்களை கண்காணிப்பதென்ற பேரினில் முட்டுக்கட்டை போட்டேவருவதாக அரசசார்பற்ற அமைப்புக்கள் தரப்பினில் சுட்டிக்காட்டப்படுகின்றது.
குறிப்பாக ஜனாதிபதி செயலணிக்குழுவென ஒன்றை உருவாக்கி அனைத்தையும் தடுப்பதே அரசினது நோக்கமாகும்.வடக்கிற்கு எதையும் செய்யவிடக்கூடாதென்பதே அரசின் நோக்கம்.அதிலும் கூடுதலாக சர்வதேச தரப்புக்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மோசமான நெருக்கவாரங்களை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக