வியாழன், 20 டிசம்பர், 2012

விஜயதாஸ ராஜபக்சவை வீட்டில் சென்று சந்தித்தார் மஹிந்த ராஜபக்ச
[ வியாழக்கிழமை, 20 டிசெம்பர் 2012, 08:30.34 AM GMT ]
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜயதாஸ ராஜபக்சவை அவரது நாவல பகுதியில் உள்ள வீட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சென்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று வியாழக்கிழமை அதிகாலை இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜேதாஸ ராஜபக்சவின் நாவல பகுதியில் உள்ள வீட்டுக்கு முன்னால் மூன்று துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் இன்று விஜேதாஸ ராஜபக்சவின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது வீட்டு வளாகத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் கலந்துகொண்டதாகவும், விஜயதாஸ எம்.பி.யின் வீட்டில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சுமார் 30 நிமிட நேரம் அவருடன் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்கக்கோனைத் தொடர்புகொண்ட ஜனாதிபதி, மேற்படி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக