பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்ட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலையை செய்யாவிடின் வடக்கு கிழக்கு எங்கும் போராட்டம் நடக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.மாணவர்களின் விடுதலையினை வலியுறுத்தி நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்வதற்கான அமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த 27ஆம் திகதிக்கு பின்னர் ஸ்ரீ லங்கா புலனாய்வு துறையினரால் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் என 45 பேருக்கு மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டோர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எமது தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னர் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னரும் அரசு ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன் தனது இராணுவத்தை பயன்படுத்தி வன் முறைகளை கட்டவிழ்த்து விட்டு அரசு தமிழர் பகுதிகளில் பதற்றமான சூழ் நிலைகளை உருவாக்கி வருகின்றது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்துக்கு இனி என்ன வேலை இருக்கிறது? இங்கிருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு தமிழ் மக்களுக்கு அமைதியானதும் சுதந்திரமானதுமான ஜனநாயக சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களுடைய சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடு வேண்டும். இதற்காகவே ஒன்றிணைந்து நாம் போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.
கைது செயப்பட்ட எமது மாணவர்களையும் இளைஞர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் போராட்டத்தை நடத்துகின்றோம்.
குறித்த மாணவர்கள் விடுதலை செய்யப்படாது விடின் வருகின்ற 14ஆம் திகதி வவுனியாவிலும் அதனை தொடர்ந்து திருகோணமலையிலும் சம்பூர் பிரதேசத்திலும் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதுடன் வடக்கு, கிழக்கு எங்கும் இப் போராட்டம் பரவும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக