புதன், 12 டிசம்பர், 2012

கட்டாயமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு பேய் பிடித்துள்ளதாம் கூறுகிறார்கள் படையினர்

தமிழ் யுவதிகளுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி படைத்தரப்பு சுமார் 21 வரையிலான யுவதிகளை நேற்றிரவு கிளிநொச்சி அரச வைத்தியசாலையினில் ஒப்படைத்துள்ளது. அண்மையில் படைத்தரப்பில் இணைத்துக் கொள்ளப்பட்ட அவர்கள் அனைவரும் கிளிநொச்சியின் பாரதிபுரம் முகாமில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. பேய் பிடித்த இவர்கள் இரவு வேளைகளில் எழுந்து நின்று சன்னதமாடுவதாக கூறியே தம்மிடம் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.னினும் அனுமதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 13 பேரென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்த போதும் சுயாதீன தகவல்கள் அவ்வெண்ணிக்கை 21 என தரிவிக்கின்றன.தற்போது வைத்தியசாலையின் தனியான பிரிவில் படையினரது கண்காணிப்பின் கீழ் இவர்கள் வைக்கப்பட்டு உள்ளதுடன் ஊடகவியலாளர்களோ தமிழ் அரசியல் தரப்பாரோ உட்சென்று பார்வையிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பெற்றோர் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆவர்களது தகவல்களின் பிரகாரம் குறித்த யுவதிகள் வெறித்துப்பார்த்த வண்ணம் மூச்சு பேச்சின்றி இருப்பதாக தெரிவித்தனர். அவர்கள் பாலியல் ரீதியாக தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டமையால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.குறித்த படை முகாமில் இரவு வேளைகளில் ஆவிகளை கண்டதாக ஒரு சிலர் சொன்ன போதும் தவறான நோக்கத்துடன் வந்த படையினராக இருக்கலாமென மற்றொரு அனுபவ தரப்பு கூறுகின்றது.
பெரும் பிரச்சாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட படையில் தமிழ் யுவதிகளை இணைக்கும் நடவடிக்கை பின்னர் தோல்வியை நோக்கியே பயணித்திருந்தது. முன்னதாக ஒரு பகுதி யுவதிகள் தப்பி ஒடி வீடுகளை வந்து சேர்ந்திருந்தனர். மற்றொரு தொகுதியினர் வீடு திரும்ப முற்பட்ட போதும் படைத்தரப்பு அவர்களது பெற்றோரை பார்க்க கூட கடந்த சில நாட்களாக அனுமதித்திருக்கவில்லை.இதனிடையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதிகளை பார்வையிட சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உட்செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி அவரை உள்ளே அனுமதிக்க கூடாதென வன்னி படைத்தலைமை வைத்தியசாலை பணிப்பாளரை பணித்திருந்ததாக மேலும் அவர் தெரிவித்தார்.இராணுவத்திற்கு வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட தமிழ்ப்பெண்களில் சிலர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிஇராணுவத்திற்கென வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்களில் 10 முதல் 15 வரையிலான பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களை ஏமாற்றி படையில் இணைத்துக் கொண்டதாக கூறி சுய விருப்பத்தின் பேரில் சில பெண்கள் அண்மையில் இராணுவத்தை விட்டு வெளியேறி இருந்தனர். ஏனையவர்களை பெற்றோர் பார்வையிட படையினர் அனுமதிக்கவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் பெற்றோருக்கும் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரு தொகுதி பெண்களை கிளிநொச்சி வைத்தியசாலையில் படையினர் அனுமதித்து உள்ளதாக அங்கிருந்துகிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக