செவ்வாய், 11 டிசம்பர், 2012

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை சுயாதீனமாக ஆராயப்படும் - ஜனாதிபதி

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை சுயாதீனமான முறையில் ஆராயப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை சுயாதீனமாக ஆராயப்படும் - ஜனாதிபதிபிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை, சுயாதீன குழுவின் மூலம் ஆராயத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணை அறிக்கையை சுயதீன குழுவொன்று ஆராய்ந்ததன் பின்னர், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமது கருத்தை வெளியிட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தனிப்பட்ட ரீதியில் தமக்கு கவலையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீன குழுவின் ஆய்வின் பின்னர் மிக நியாயமான தீர்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமது ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளாது, 117 ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையி;ல்லா தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரும் அதன் பின்னரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் பிரதம நீதியரசருக்கு எதிராக குரல் கொடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி தற்போது அவருக்கு ஆதரவாக குரல் எழுப்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக