வியாழன், 13 டிசம்பர், 2012

News Serviceஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணிகள் சங்கத் தலைவருமான விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக குற்றப் பிரேரணையொன்று கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சில உறுப்பினர்கள் இவ்வாறு குற்றப் பிரேரணை தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளனர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை எதிர்க்கட்சிகளின் கைப்பொம்மையாக, விஜயதாச ராஜபக்ச மாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர். குறிப்பாக பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். குற்றப் பிரேரணையில் மேலும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். வெகு விரைவில் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக