சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுவோருக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டோருக்கு அடைக்கலம் வழங்கும் நோக்கில் விசேட நிலையமொன்றை அமெரிக்க நிறுவியுள்ளது. இந்த நிலையத்தை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் திறந்து வைத்தார். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்காக அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என சிசன் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களும் ஊடகங்களும் போதியளவு விளக்கத்தை அளிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்கும் அதேவேளை, கடத்தல்காரர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் பணிகளுக்காக அமெரிக்கா, இலங்கைக்கு 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக