ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் ஐ.நா. சபையையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரையும் சமாளிப்பதற்காகவே மஹிந்த அரசு, கூட்டமைப்புடனான பேச்சை ஆரம்பிப்பதற்கு அவசரப்படுகிறதென அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் தனக்கு ஏற்படவுள்ள அழுத்தத்தை குறைத்துக் கொள்ள எண்ணுகிறது அரசு. அதற்காகத்தான் கூட்டமைப்புடனான இந்தப் பேச்சு நாடகம். அவசர அவசரமாக ஜனாதிபதி எம்மை பேச்சுக்கு அழைப்பதன் முக்கிய நோக்கம் இதுதான். வடக்கு, கிழக்கில் தற்போது நிலவும் இராணுவ ஆட்சி நீக்கப்பட்டு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதனை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். வலி.வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களில் 28 ஆயிரம் பேர்வரை தற்காலிக முகாம்களிலேயே வசித்து வருகிறார்கள். அவர்களின் சொந்த இடங்கள் இராணுவத்தினர் வசம் உள்ளன. அதனை அவர்கள் விரைவில் விடுக்க வேண்டும். அங்கு மீளக்குடியமர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமைக்கு இராணுவத்தினரே காரணம். ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு இடமுண்டு. அதனை அடக்குவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. தமிழ் மக்களின் சாதாரண பிரச்சினைகள் கூட இன்னும் அரசினால் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் அரசுடன் தொடர்ந்து பேசி என்னபலன் கிடைக்கப் போகிறதென விநாயகமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக