சனி, 15 டிசம்பர், 2012

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை பகிரும் சமஷ்டி ஆட்சியே இலங்கைக்கு தேவை - மங்கள

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை  பகிரும் சமஷ்டி ஆட்சியே இலங்கைக்கு தேவை -  மங்கள13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நீக்குவதற்கு பதிலாக கூடுதல் அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பகிரும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வாராந்த செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு போதுமானதல்ல. தேவையானால், தெற்கில் மாகாண சபை முறைமையை இரத்துச் செய்ய ஐக்கிய தேசியக்கட்சி இணக்கும் எனவும் மங்கள கூறியுள்ளார்.

இலங்கைக்கு தேவையானது சமஷ்டி ஆட்சி முறை என தெரிவித்துள்ள மங்கள, 2000 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அவ்வாறான தீர்வு திட்டம் ஒன்றை வழங்கவே முயற்சி செய்தாகவும் கூறியுள்ளார். நாட்டை சமஷ்டி நாடாக மாற்றினால் என்ன?. அதற்கு அச்சமடைய தேவையில்லை. சமஷ்டி ஆட்சியே இலங்கைக்கு தேவைப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு அப்படியான யோசனையையே நாங்கள் கொண்டு வந்தோம். ஐக்கிய ராஜ்ஜியமாக இருக்கும், பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் பிராந்தியங்களில் தனியான நாடாளுமன்றங்கள் இருக்கின்றன எனவும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் 2000 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க கொண்டு வந்த சமஷ்டி முறையிலான அதிகார பரவலாக்கம் அடங்கிய தீர்வு பொதியை ஐக்கிய தேசியக்கட்சி நிராகரித்தது என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக