ஞாயிறு, 2 டிசம்பர், 2012

பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாடு தொடர்பில் கனடா மீண்டும் எச்சரிக்கை

பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாடு தொடர்பில் கனடா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்படாத பட்சத்தில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு இலங்கை அரசாங்கம் நியாயம் வழங்கத் தவறியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் கிறிஸ்டியன் ரோய் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு குறித்து கனடா மீண்டும் எச்சரிக்கை
நீதிமன்றக் கட்டமைப்பின் மீதான அண்மைய அழுத்தங்கள் தொடர்பில் உன்னிப்பதாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் குறிப்பிடக்தக்களவு அரசியல் நல்லிணக்கம், மனித உரிமை மேம்பாடு போன்றன ஏற்படாத பட்சத்தில், 2013ம் ஆண்டு நடைபெறும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் ஹார்பர் பங்கேற்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இலங்கை மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு ஹார்பர் கோரியிருந்தார்.

எனினும், எதிர்பார்க்கப்பட்டளவு மனித உரிமை நிலைமைகளில் மாற்றம் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

பிரதம நீதியரசருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக