ஐக்கிய மற்றும் பிரிக்கப்படாத இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வு என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கு தயராக உள்ளதா? எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மன்றில் வினவினார்.வெளிவிவகார அமைச்சின் மீதான குழுநிலை விவகாரத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இழுத்தடிக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை எனும் கொள்கைக்கு பதிலாக பெரும்பான்மை இன பெருமிதவாத சிந்தனையில் மூழ்கியுள்ளது. அரசாங்கத்திலும் பாகுபாடு காட்டும் மனப்பாங்கு உள்ளது. இது எதிர் காலத்தில் நாட்டுக்கு கெடுதியானதாகும்.
இந்த நிலை தொடருமாயின் நீங்கள் படுகுழியில் அமிழ்ந்து விடுவீர்கள். பின்னர் மீட்சியே கிடையாது. நாடுகளில் உங்கள் பக்கத்திற்கு இழுக்க முயல்வது அர்த்தமில்லை. சுரியானதை செய்யுங்கள். நீங்கள் பொறுப்புக்கூறும் பிரச்சினையை தீர்க்க வேண்டும். அத்துடன் அரிசயில் தீர்வை கொண்டுவரவேண்டும்' என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக