யாழ்.பல்கலைக்கழகத்தை மீள இயக்குவது தொடர்பில் வௌ;வேறு தரப்புகளும் நிர்வாகத்திற்கு கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தகவல்;கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பல்கலைக்கழகத்தினை மீள திறப்பது தொடர்பான அறிவிப்பினை விடுக்குமாறு துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்திற்கு கடந்த ஒரிரு நாட்களாக நிர்ப்பந்தங்கள் பிரயோகிப்பதாக பீடாதிபதியொருவர் தெரிவித்தார். எனினும் மாணவர் அமைப்புக்களும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பெரும்பான்மையானவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டால் மட்டுமே விரிவுரைகளில் பங்கெடுக்க முடியுமென்ற நிலைப்பாட்iடை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.ஏற்கனவே மருத்துவ பீட விரிவுரைகளை ஆரம்பிக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சி மாணவர்களது கடுமையான எதிர்ப்புகளால் பிசுபிசுத்துப்போயுள்ளது. அதை தொடர்ந்து அவ்விடயத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையினையடுத்து அதை தீர்த்து வைக்க மறுபுறம் இரகசியப்பேச்சுக்கள் ஆரம்பமாகி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.ஏற்கனவே வெலிகந்தவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்குமிடையே இடம்பெற்ற பேச்சுக்கள் பலனளித்திருக்கவில்லை. தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
செவ்வாய், 18 டிசம்பர், 2012
யாழ் பல்கலைக்கழகத்தை மீளஇயக்க கடும் அழுத்தங்கள் பிரயோகிப்பு – மாணவர் விடுதலையின்றி வழமைக்குதிரும்ப பெரும்பான்மை பல்கலை சமூகம் மறுப்பு
யாழ்.பல்கலைக்கழகத்தை மீள இயக்குவது தொடர்பில் வௌ;வேறு தரப்புகளும் நிர்வாகத்திற்கு கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தகவல்;கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பல்கலைக்கழகத்தினை மீள திறப்பது தொடர்பான அறிவிப்பினை விடுக்குமாறு துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்திற்கு கடந்த ஒரிரு நாட்களாக நிர்ப்பந்தங்கள் பிரயோகிப்பதாக பீடாதிபதியொருவர் தெரிவித்தார். எனினும் மாணவர் அமைப்புக்களும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பெரும்பான்மையானவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டால் மட்டுமே விரிவுரைகளில் பங்கெடுக்க முடியுமென்ற நிலைப்பாட்iடை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.ஏற்கனவே மருத்துவ பீட விரிவுரைகளை ஆரம்பிக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சி மாணவர்களது கடுமையான எதிர்ப்புகளால் பிசுபிசுத்துப்போயுள்ளது. அதை தொடர்ந்து அவ்விடயத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையினையடுத்து அதை தீர்த்து வைக்க மறுபுறம் இரகசியப்பேச்சுக்கள் ஆரம்பமாகி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.ஏற்கனவே வெலிகந்தவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்குமிடையே இடம்பெற்ற பேச்சுக்கள் பலனளித்திருக்கவில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக