செவ்வாய், 18 டிசம்பர், 2012

வடமராட்சி கிழக்கில் ஊர் பிரமுகர்களுக்கு EPDP பிரமுகர் விடுத்த பகிரங்க கொலை மிரட்டலால் சர்ச்சை

வடமராட்சி கிழக்கில் ஊர் பிரமுகர்களுக்கு ஈபிடிபி பிரமுகரொருவர் பகிரங்கமாக விடுத்த கொலை மிரட்டல் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்;களில் முறைகேடாக மணல் அகலப்படுவதாகவும் உள்ளுர் வாகனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு நிலுவைகள் சீர் செய்யப்படவில்லை எனவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்கள் மணல் அகழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஈபிடிபி சார்பு மகேஸ்வரி நிதியம் வாகனங்களை உள்நுழைய அனுமதி மறுத்து வருவதுடன் மக்கள் குடியிருப்புகளிடையே மணல் முறையற்று அகழ்வதால் குடியிருப்புக்கள் கடல் நீரால் மூழ்கடிக்கப்படலாம் எனவும் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் முறையற்ற மணல் அகழ்வு தொடர்பில் உரியநடவடிக்கை எடுக்க கோரி யாழ்.அரச அதிபர் மற்றும் மணல் அகழ்விற்கான இடங்களை ஒதுக்கி வழங்கும் கனிய வளங்கள் அளவை திணைக்களம் என்பவற்றில் முறைப்பாடுகளை செய்திருந்தனர்.இதையடுத்து இன்று உயர்மட்ட மாநாடொன்று இடம்பெற்றிருந்தது. வடமராட்சி கிழக்கு அரச அதிபர் மற்றும் கனிய அளவைகள் திணைக்கள அதிகாரிகள் சகிதம் மகேஸ்வரி நிதியப் பணிப்பாளர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இடம்பெற்ற பேச்சுக்களில் சுமுக நிலை எட்டப்படாத நிலையிலேயே மகேஸ்வரி நிதிய பணிப்பாளர் மக்கள் பிரதிநிதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படுகின்றது. குறிப்பாக பிரசன்னமாகியிருந்த அதிகாரிகள் மத்தியில் விடுக்கப்பட்ட இக்கொலை அச்சுறுத்;தல் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.ஒருவரும் உயிருடன் இருக்க மாட்டீர்கள் இனிமேல் எவரேனும் வீதிகளில் இறங்கிப்பாருங்கள் நடப்பது என்னவென தெரியுமென' பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து தமது அடுத்த கட்ட நடைமுறைகள் பற்றி தாம் ஆராய்ந்து வரவதாக தெரிவித்த மக்கள் பிரதிநிதிகள் தமது மண் தொடர்ந்தும் சுரண்டப்படவதற்கு எதிராக போராடப்போவதாகம் கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக