ஞாயிறு, 23 டிசம்பர், 2012

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன ரீதியாக செயற்பட்டதாகத் தெரிவித்து உச்ச நீதிமன்றில் மனுவொன்று

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன ரீதியாக செயற்பட்டதாகத் தெரிவித்து உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சையின் போது இன ரீதியாக செயற்பட்டதாக அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் தோற்றிய மாணவர்கள் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளனர்.

சட்டக்கல்லூரி பரீட்சைகள் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டுமென 2004ம் ஆண்டு பிரதம நீதியரசர் பரிந்துரை செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீம், நீதி அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் உரிய முறையில் சட்டக் கல்லூரிக்கான அனுமதிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இன ரீதியான அடிப்படையில் மாணவர் தெரிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அடுத்தடுத்த பரீட்சை எண்களைக் கொண்ட 20 முஸ்லிம் மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அதிகளவான முஸ்லிம்கள் சட்டக் கல்லூரிக்கு அனுமதி பெற்றுக் கொண்டுள்ளனர் என தேசிய புத்திஜீவிகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக