தற்போது நடைமுறையிலுள்ள 1978ம் ஆண்டின் அரசியலமைப்பின்படி நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி சகல அதிகாரங்களைக் கொண்டவராக இருக்கின்றார். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிகாரங்களை ஜனாதிபதியிடம் தரை வார்த்து விட்டு வெறும் கைப்பொம்மைகளாகச் செயற்படும் நிலை தோன்றியுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் வகையில் 17வது திருத்தம் அமைந்திருந்து போதும் அதை வலுவற்றதாக்கும் முறையில் 18வது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
18வது திருத்தச்சட்டம் இலங்கையின் அரசியல் முறைமையின் ஸ்திரத்தன்மையை இல்லாதாக்கிவிட்டது. இப்படியான பாதிப்புகள் காலஞ்செல்லச்செல்ல அதிகரித்துச் செல்லும் போக்கையே காண்பிக்கின்றது.
ஜனநாயக வழிமுறைகளை இல்லாதொழிக்கும் வகையில் 18ம் திருத்தம் அமைந்துள்ளது. இத்தகைய பாதிப்புகளைக் கொண்ட 18வது திருத்தத்தை சட்டமாக்குவதற்கும் உயர்நீதிமன்றமே காரணகர்த்தாவாக இருந்துள்ளதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
இன்றைய உங்களது கூட்டத்தை நடைபெறாதிருக்க தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இந்த அதிகாரங்களின் எதிரொலியே. என்றாலும் குகையின் முடிவில் ஒரு ஒளிக்கீற்று தென்படுகிறது.
பதவியிலுள்ளவர்கள் நீதிபதிகளின் வருடாந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்றால் அச்சத்தினதும் பலவீனத்தினதும் பிரதிபலிப்பு அல்லவா? உங்களது ஒற்றுமை அவர்களுக்கு தலையிடியாக அமைகின்றதாக தென்படுகின்றது.
மநிலை தவறாது உங்கள் கடமைகளைச் செவ்வனே செய்வதுதான் உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது. உங்களது ஒற்றுமையைச் சிதைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்கலாம்.
உங்களது ஒற்றுமைதான் ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் நிலைநிறுத்த உதவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக