வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக கவனம் செலுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.குறிப்பாக வடக்கின் நிலைமைகள் மோசமடைந்து செல்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் குமாரகுருபரன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாணவர்களின் பெற்றோர் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டவர்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.வெள்ளை வான்களின் மூலம் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகளினால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.முஸ்லிம் மத வழிபாட்டு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென குமாரகுருபரன் வலியுறுத்தியுள்ளார்.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
சனி, 29 டிசம்பர், 2012
வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து ஜனாதிபதி நேரடியாக கவனம் செலுத்த வேண்டும்
வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக கவனம் செலுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.குறிப்பாக வடக்கின் நிலைமைகள் மோசமடைந்து செல்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் குமாரகுருபரன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாணவர்களின் பெற்றோர் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டவர்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.வெள்ளை வான்களின் மூலம் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகளினால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.முஸ்லிம் மத வழிபாட்டு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென குமாரகுருபரன் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக