யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசும் அதனது முகவர்களும் அபிவிருத்தி பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கையில் இன்று நான்கே வயதேயான சிறுமி பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மண்டைத்தீவு கிணறொன்றிலிருந்து இன்று மதியம் குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமியான சுரேந்திரன் சுதந்தினி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் குறித்த சிறுமி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளான நிலையில் சடலமாக வீசப்பட்டிருந்தமை இன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.மனித பயன்பாட்டிலில்லாத குறித்த கிணற்றினுள் சிறுமி அணிந்து சென்றிருந்ததாக நம்பப்படும் பாதணியும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வகையில் படுகொலை செய்யப்பட்ட பின்னர் இச்சிறுமி வீசப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுந்திருந்தது.ஏற்கனவே நெடுந்தீவில் இதே பாணியில் ஒரு சிறுமி படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்ந்தும் சிறைச்சாலையினில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக