புதன், 26 டிசம்பர், 2012

இந்திய வீட்டுத்திட்டப்பயனாளிகள் தெரிவில் தான் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஒருவர் போராட்டம்

இந்திய வீட்டுத் திட்டப்பயனாளிகள் தெரிவில் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்து ஒருவர் போராட்டம்இந்திய வீட்டுத்திட்டப்பயனாளிகள் தெரிவில் தான் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் நாச்சிகுடா கிராம அலுவலர் பிரிவிலுள்ள கரடிகுன்று என்ற இடத்தில் விசிக்கும் சின்னத்தம்பி அம்பிகைதாசன் என்பவர் கடந்து திங்கள் அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

யுத்தத்தால் தமது வீடுகள் உடமைகளை இழந்து இடம்பெயர்ந்து சென்று மீள்குடியேறிய போதிலும் பல்வேறு திட்டங்களின் மூலம் வீட்டுத்தட்டங்கள் வழங்கப்பட்ட போதிலும் அந்தச் சந்தர்ப்பத்தில் தானும் வீட்டுக்கோரிக்கையினை கிராம அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விடுத்தபோதெல்லாம் இந்தியன் வீடடுத்திட்டத்தில் உள்வாங்ப்படுவீர்கள் என உறுதிமொழி வழங்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியன் வீட்டுத்திட்டதிலும் தாம் உள்வாங்கப்படவில்லை எனக் கூறும் அம்பிகைதாசன் அவர்கள் தனக்கு நியாயம் தேவை எனவும் அதற்காகவே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

தனது கிராமத்தில் உண்ணாவிரத்தினை ஆரம்பித்த ஆம்பிகைதாசனின் இடத்திற்கு சென்ற கிராம அலுவலர் எதிர்வரும் 27 திகதி இந்தியன் வீட்டுத்திட்டம் தொடர்பான அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் நடக்க இருப்பதனால் அங்கு வருகை தந்து கோரிக்கையினை முன் வைக்குமாறும் தற்போது உண்ணாவிரத்தினை கைவிடுமாறு கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக அவர் தனது உண்ணாவிரத்தனை கைவிட்டுள்ளார்.

மாவட்டத்திற்கான இந்தியன் வீட்டுத்திட்ட ஒதுக்கீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் பயனாளிகள் தெரிவில் பின்பற்றப்படுகின்ற விதிமுறைகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் காரணமாகவும் பாதிக்கப்பட்ட பல மக்கள் இந்தியன் வீட்டுத்திட்டதிலும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கும் அதிகாரிகள் இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் வீட்டுத்திட்டப்பயனாளிகள் தெரிவில் அறிவித்திருக்கும் நடைமுறைகள் தொடர்பில் புள்ளியிடும் முறைக்கு அமைவாக பத்து புள்ளிகளுக்கு மேல் எடுக்கும் அனைவருக்கும் இந்தியன் வீடு என இருப்பதால் சில சந்தர்ப்பங்களில் பத்து புள்ளிக்கு மேல் எடுத்த ஒருவரை விட எட்டு,ஒன்பது புள்ளிகள் எடுத்த குடும்பங்கள் ஒப்பீட்டு ரீதியில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எனவே இந்த முறைகளில் காணப்படும் குறைபாடுகள் காரணமாகவே மேற்படி நிலைமைகள் ஏற்பட காரணம் உள்ளுர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக