நம்பிக்கையில்லாப் பிரேரணையால் பெரும் அசௌகரிய நிலைமையை எதிர்நோக்கி வரும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், இந்த பிரச்சினையில் இருந்து மீள்வதற்காக முற்றாக எவரும் நினைத்து பார்க்காத வேறு நடவடிக்கை தொடர்பான சூழ்;ச்சி திட்டம் ஒன்றை வகுத்து வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்பு தகவல்களை வழங்கி வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சரவையில் உள்ள மிகவும் பேசப்பட்டு வரும், கிழக்கு மாகாணத்தில் இருந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்ட தமிழ் அமைச்சர் ஒருவரை கொலை செய்வதே அந்த சூழ்ச்சித் திட்;டமாகும்.இந்த கொலையானது பயங்கரவாத தாக்குதல் என்று ஜோடிப்பதற்காக தற்போது, வடக்கில் புதிய தமிழ் புலிகள் அமைப்பு உருவாகி வருவதாக அரசாங்கம் புனைக்கதைகளை பரப்பி வருகிறது.இந்த கொலை ஒப்பந்தம், அதிரடிப்படையை சேர்ந்த கொலை செய்யும் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நபர் குறித்து ஏற்கனவே இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தனமேற்படி கொலை நடைபெற்றால் நாட்டில் பெரும் அமளியான நிலைமை ஏற்படும் எனவும் இதனை பயன்படுத்தி அரசாங்கம் விடயங்களை முன்னெடுக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் ஏற்படும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு, அவசரகாலச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துதல், குறித்த தமிழ் அமைச்சரினால் அரசாங்கத்திற்கு தற்போது எந்த பிரயோசனமும் இல்லை என்பதால், அவரை கொலை செய்து, அவர் மூலம் மேற்கொள்ளப்பட்ட ரகசியமான நடவடிக்கைகள் தொடர்பான சாட்சியங்களை அழித்தல், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விடயத்தை திசைத்திருப்புதல், மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறி, அதனை தமக்கு சாதமாக பயன்படுத்தி கொள்ளுதல், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டு வரும் எதிர்ப்புகளை தடுத்து, அரசாங்கத்தில் உள்ளவர்களின் மனநிலையில் அச்சத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக