வியாழன், 27 டிசம்பர், 2012

காப்பாற்ற சென்ற இந்தோனேசியர்களை நிராகரித்து ஆஸி.யின் உதவியை நாடி நிற்கும் இலங்கை அகதிகள்!

News Serviceஇந்தோனேசிய கடற்கரையில் தரைதட்டிள்ள படகில் உள்ளவர்கள் இந்தோனேசிய அதிகாரிகளின் உதவிகளை நிராகரித்துள்ளனர். இந்தோனேசிய தகவல்களின்படி, இலங்கையர்கள் இருக்கலாம் என்று நம்பப்படும் இந்தப்படகு இந்தோனேசிய மெண்டாவாய் தீவுப் பகுதியில் இயந்திரப் பிரச்சினை காரணமாக தரைதட்டியுள்ளது. படகில் உள்ள 40 பேரையும் காப்பாற்ற இந்தோனேசிய அதிகாரிகள், குழு ஒன்றை அனுப்பினர். எனினும் படகில் இருந்தோர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பதிலாக தமக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் உதவவேண்டும் என்று படகில் உள்ளவர்கள் கோரியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக