தனக்கு எதிராக அரச ஊடகங்கள் சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், சிரேஸ்ட சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பை இழிவுபடுத்தும் நோக்கில் அரசாங்க ஊடகங்களில் திட்டமிட்ட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரே இதன் பின்னணியில் இருப்பதாகவும் தன்னை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்தே இப்பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட ரீதியாக தன்னை பதவி விலக்க முடியாது என நன்கு அறிந்து கொண்ட அரசாங்கம் இவ்வாறு போலிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக