விடுதலைப் புலிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் பாதாளகுழுக்களிடம் கண்டுபிடிப்பு!
இலங்கையின் தென் மாகாணத்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலக முக்கியஸ்தர் ஒருவர் வைத்திருந்த மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகள் அடங்கலான பல ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து படை நடவடிக்கையின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.இது தொடர்பில் சிங்கள இணையம் ஒன்று தெரிவித்துள்ளதாவது, தென் மாகாணத்தின் முக்கிய புள்ளியான “எஸ். ரி.எப்“ என்று அழைக்கப்படும் இந்த பாதாள உலகத் தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இவரை விசாரித்த போது இவரிடம் மைக்ரோ ரக துப்பாக்கி ஒன்றும் ரி-56 மற்றும் 3.8 ரக ரிவோல்வரும் கைப்பற்றப்பட்டன.
இதற்கு மேலாக மைக்ரோ ரக துப்பாக்கிகள் -04, பெருந்தொகையான ரி-56 துப்பாக்கிகள் மற்றும் ரிவோல்வர்களும் இவர் வைத்திருந்தமையும் தெரிய வந்துள்ளது. இவை அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பணம் கொடுத்து வாங்கப்பட்டவை என அவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இராணுவத்தில் இருப்போர்கள், தப்பி ஓடியவர்களே இந்த ஆயுதங்களை குறித்த பாதாள குழுவிற்கு விற்பனை செய்துள்ளதாக சுயாதீன தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக