செவ்வாய், 25 டிசம்பர், 2012

சர்வதேசம் நாட்டிற்குள் தலையீடு செய்யக் கூடிய பின்னணியை ........

News Serviceசர்வதேசம் நாட்டிற்குள் தலையீடு செய்யக் கூடிய பின்னணியை அரசங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்வதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த, நடவடிக்கை எடுக்க அரசாங்கமே வழியமைத்துக் கொடுக்கின்றது. நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கவில்லை. நாடாளுமன்ற உறப்பினர்களை விலைகொடுத்து வாங்கி இந்த பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டது. மக்களினால் வழங்கப்படாத மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக