செவ்வாய், 25 டிசம்பர், 2012

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீனவர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தரின் தலையில் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்கு அருகாமையில் குடிபோதையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தவிர்க்க சென்ற போது குறித்த பொலிஸ் உத்தியொகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலை நடத்திய மீனவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக