செவ்வாய், 18 டிசம்பர், 2012

அலரி மாளிகையில் நத்தார்!

எதிர் வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஜனாதிபதியின் அலரி மாளிகையிலும் விசேட நத்தார் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.ஜனாதிபதியின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் அலரி மாளிகையில் கடமைபுரியும் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரின் பிள்ளைகள் உட்பட சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டனர். றிஸ்மஸ் நத்தார் கரோல் கீதங்கள் ,மெஜிக் காட்சிகள் ,பொலீஸ் நாய்களின் வித்தைகள் உட்பட சிறுவர்களை மகிழ்விக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இந்நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு நத்தார் தாத்தா பரிசில்களையும் வழங்கினார்.ஜனாதிபதியின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரிலேயே இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக