வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகின்றாரே? வடக்கை தனி நாடாகப் பிரித்து விட்டீர்களா என நான் அவரைக் கேட்க விரும்புகின்றேன் என ஊவா மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவருமான வே. வேலாயுதம் இவ்வாறு கேள்வி எழுப்பினார். ஐக்கிய தேசியக் கட்சியின் 54 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு அவர் தொடர்ந்து பேசும் போது கூறியதாவது, இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன் வைக்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தத்துக்கு மாற்றம் கொண்டு வர வேண்டுமென்கிறார் ஒரு அமைச்சர். 13 பிளஸ் என்கிறார் ஒரு அமைச்சர். 13 ஆவது அரசியலமைப்பை ஒழித்துவிட வேண்டுமென்கிறார், மற்றுமொரு அமைச்சர். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த அரசு எந்த காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும் குழப்ப நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்த ஆட்சி மொத்த நாட்டையும் சூறையாடி விட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தலையிட்டு தமக்கு சாதகமாக நீதிமன்றங்களை செயற்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் லெப்டொப், வட்டியில்லா வாகனக்கடன் போன்ற அற்ப சலுகைகளுக்காக இந்த அரசின் ஊழல்களை மறைக்க முயற்சிக்கக் கூடாது. மக்களுக்கு நாட்டின் உண்மை நிலையை எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
ஞாயிறு, 2 டிசம்பர், 2012
வடக்கை தனி நாடாகப் பிரித்து விட்டீர்களா
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகின்றாரே? வடக்கை தனி நாடாகப் பிரித்து விட்டீர்களா என நான் அவரைக் கேட்க விரும்புகின்றேன் என ஊவா மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவருமான வே. வேலாயுதம் இவ்வாறு கேள்வி எழுப்பினார். ஐக்கிய தேசியக் கட்சியின் 54 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு அவர் தொடர்ந்து பேசும் போது கூறியதாவது, இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன் வைக்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தத்துக்கு மாற்றம் கொண்டு வர வேண்டுமென்கிறார் ஒரு அமைச்சர். 13 பிளஸ் என்கிறார் ஒரு அமைச்சர். 13 ஆவது அரசியலமைப்பை ஒழித்துவிட வேண்டுமென்கிறார், மற்றுமொரு அமைச்சர். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த அரசு எந்த காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும் குழப்ப நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்த ஆட்சி மொத்த நாட்டையும் சூறையாடி விட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தலையிட்டு தமக்கு சாதகமாக நீதிமன்றங்களை செயற்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் லெப்டொப், வட்டியில்லா வாகனக்கடன் போன்ற அற்ப சலுகைகளுக்காக இந்த அரசின் ஊழல்களை மறைக்க முயற்சிக்கக் கூடாது. மக்களுக்கு நாட்டின் உண்மை நிலையை எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக