.போதனா வைத்தியசாலைக்கு என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைக்கப்பட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சங்க கூட்டம் இன்று நடந்து முடிந்துள்ளது. ஆளும் தரப்பினால் நியமிக்கப்பட்ட சுதந்திரக்கட்சி அங்கத்தவர்கள் எவரும் இன்றைய கூட்டத்திற்கு அமைச்சர் தரப்பினால் அழைக்கப்பட்டு இக்கவில்லை. அண்மையில் யாழ்.போதனா வைத்தியசாலை நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அபிவிருத்தி சங்கமொன்றையும் ஸ்தாபித்துக்கொண்டார்.
எனினும் அவருக்கு போட்டியாக சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளர்களுள் ஒருவரான வேல்முருகு தங்கராசா தானும் சுகாதார அமைச்சின் அனுமதியினை பெற்று வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினுள் ஆதரவாளர்களுடன் புகுந்து கொண்டுள்ளார். அமைச்சரது அங்கத்தவர்களுககு ஈடாக வேல்முருகு தங்கராசா தரப்பினது அங்கத்தவர்கள் எண்ணிக்கையும் அடங்கியிருப்பதால் தனித்து எதனையும் செய்யமுடியாத நிலை அமைச்சர் தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாதாந்தக்கூட்டங்களை கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அமைச்சர் மாதாந்த கூட்டத்தை நடத்தி முடிந்துள்ளார். வேல்முருகு தங்கராசா தரப்பினது அங்கத்தவர்களுக்கு எந்தவிதமான அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து ஆளும் தரப்பினால் நியமிக்கப்பட்ட சுதந்திரக்கட்சி அங்கத்தவர்கள் தமது தலைவரான வேல்முருகு தங்கராசா சகிதம் கூட்டமொன்றை தனித்து நடத்தவுள்ளதாக அறவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக