வெள்ளி, 7 டிசம்பர், 2012

பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணைகள் சுயாதீனமான முறையில் நடைபெற வேண்டும் - அமெரிக்கா

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக் குழு விசாரணைகளை நடத்தி வருகின்றது.வெளிப்படைத்தன்மையும், பக்கச்சார்பற்றதுமான வகையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவான முறையில் சுயாதீனமான முறையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.இலங்கையின் நீதித்துறை மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அமெரிக்கா உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக