யாழ்.குடாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை புறந்தள்ளி அண்மைக்காலமாக ஆளும் தரப்பு முண்டியடித்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்ற நிலையில் உள் முரண்பாடுகள் உச்சம் பெற்றுள்ளன.
சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள யாழ்.பல்கலைக்கழக விவகாரத்தில் இடம்பெற்ற பேச்சுக்கள் எவற்றிலும் அமைச்சரோ அவரது தரப்புகளோ அழைக்கப்பட்டு இருக்கவில்லை. மறுபுறத்தே அவரது அரசியல் போட்டியாளரும் சுதந்திக்கட்சி அமைப்பாளருமான அங்கயன் மற்றும் அவரது தந்தையார் இராமநாதன் ஆகியோரே அழைக்கப்பட்டிருந்தனர்.
துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுக்கு ஈடாக அவர்கள் யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கத்துருசிங்காவினால் கூட்டப்பட்ட கூட்டத்தில் முக்கியமளிக்கப்பட்டிருந்தனர்.
அதே போன்று நேற்று யாழ்.நகரில் இடம்பெற்ற விடுதிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் புறந்தள்ளப்பட்டிருந்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலரது நிர்வாகத்திற்குட்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் அங்கயனே முதன்மைபடுத்தப்பட்டார்.
எனினும் அங்கு அழைக்கப்பட்டிருந்த முதல்வர் யோகேஸ்வரி அங்கயன் பற்றி ஏதும் பேசவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இரு தரப்பிடையேயும் நடந்த மோதலின் போது அங்கயனினால் யோகேஸ்வரி தரப்பு அடிவாங்கியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக நாளை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வடக்கு மாகாண சபையினது இலக்கிய விழா தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்hமையே தடைக்கு காரணமென கூறப்படுகின்றது.
அதிலும் தனது கட்சியை சேர்ந்த சந்திரகுமாருக்கு வழங்கப்பட்ட கௌரவத்தை கூட தனக்கு வழங்கவில்லையென அமைச்சர் சீறிப்பாய்ந்ததாக வடமாகாண சபை அதிகாரிகள்; தரப்பில் கூறப்படுகின்றது.
எனினும் ஊடகங்களது கண்களிலிருந்து தப்பிக்க ஏதுவாக காலை ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்வை மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தடன் கலைஞர்களை கௌரவிக்கும் விருதினை தானே வழங்க வேண்டுமென பணித்துள்ள அமைச்சர் திட்டமிடப்பட்ட பாடசாலை தவிர்ந்த வேறு பாடசாலை மண்டபங்களை ஒதுக்கவும் பணித்துள்ளார்.
விடுதலைப்புலிகளது முதற் கரும்புலித்தாக்குதல் இப்பாடசாலையினில் தளமைமைத்திருந்த படையினர் மீதே நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக