வெள்ளி, 7 டிசம்பர், 2012

உயர்மட்டத்தில் இருந்தால் என்ன - கீழ் மட்டத்தில் இருந்தால் என்ன சட்டத்திற்கு அமைவாக சகல விடயங்களும் முன்னெடுக்கப்படும்: -மஹிந்த ராஜபக்ஷ

News Serviceநான் யாரையும் பழிவாங்கும் எண்ணம் கொண்ட மனிதன் அல்ல. பதவிகளில் உயர்மட்டத்தில் இருந்தால் என்ன, கீழ் மட்டத்தில் இருந்தால் என்ன, சகலருக்கும் சட்டம் சமனானது. யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன வெளியேறும் நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கெநோவின் ஓய்வகத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை திறந்துவைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி ஒருவரின் ஊழல் மோசடி குறித்து எதிர்க்கட்சி அன்று கோஷம் எழுப்பியது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஓடியது. அவரின் தராதரம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றது. இன்று சட்டத்திற்கு அமைய, அரசியலமைப்பிற்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அரசாங்கத்திற்கு எதிரான குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் தலைசாய்க்காது. சட்டத்திற்கு அமைவாக சகல விடயங்களும் முன்னெடுக்கப்படும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக