வெள்ளி, 7 டிசம்பர், 2012

மன்னார் ஆயர் புலிகளின் கொள்கையை பிரச்சாரம் செய்வதாக குற்றச்சாட்டு

புகலிடம் கோரும் இலங்கையர்களை நாடு கடத்தும் திட்டத்தை அவுஸ்திரேலிய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவுஸ்திரேலிய அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை நிகலோஸ் செல்வராஜ் இதற்கான பதிலை கடிதம் ஒன்றின் மூலம் அளித்துள்ளார்.

நாடு கடத்தப்படும் இலங்கையர்களுக்கு உள்நாட்டில் ஆபத்து இருப்பதாக மன்னார் ஆயர் அவுஸ்திரேலிய அரசுக்கு குறிப்பிட்டுள்ளார்.

எனினுத் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் குரல் கொடுத்து வருவதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளை பிரச்சாரம் செய்து வருவதாகவும் அருட்தந்தை நிகலோஸ் செல்வராஜ் தனது பகிரங்க கடிதத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் இழப்பிற்கு படையினர் காரணம் என கூறியுள்ள மன்னார், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அவாடிகள் குறித்து வாய் திறக்காதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை நிலைமைகள் குறித்து மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவுஸ்திரேலியாவிற்கு எழுதிய கடிதத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என அருட்தந்தை நிகலோஸ் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அதிகளவு இலங்கையர்கள் பொருளாதார நோக்கம் கருதியே அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி வருவதாக அருட்தந்தை நிகலோஸ் செல்வராஜா குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக