நாடளாவிய ரீதியில் தற்போது நடைபெற்று வருகின்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சையில் விஞ்ஞான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியாகிவிட்டதா? என்பது தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) மேற்கொண்டு வருகின்றனர்.தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியரால் வழங்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளில் உள்ள கேள்விகளில் 18 கேள்விகளும் படங்களும், விடைகளும் பரீட்சையின் போது வழங்கப்பட்ட வினாத்தாளில் உள்ள கேள்விகளும்,பதில்களும், படங்களும் ஒரேமாதிரியாக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்ததை அடுத்தே இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை நேற்று 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு முன்னர் கம்பஹா பிரதேசத்திலேயே இந்த மாதிரி வினாத்தாளை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
ஞாயிறு, 16 டிசம்பர், 2012
விஞ்ஞான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா?:சி.ஐ.டி விசாரணை
நாடளாவிய ரீதியில் தற்போது நடைபெற்று வருகின்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சையில் விஞ்ஞான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியாகிவிட்டதா? என்பது தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) மேற்கொண்டு வருகின்றனர்.தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியரால் வழங்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளில் உள்ள கேள்விகளில் 18 கேள்விகளும் படங்களும், விடைகளும் பரீட்சையின் போது வழங்கப்பட்ட வினாத்தாளில் உள்ள கேள்விகளும்,பதில்களும், படங்களும் ஒரேமாதிரியாக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்ததை அடுத்தே இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை நேற்று 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு முன்னர் கம்பஹா பிரதேசத்திலேயே இந்த மாதிரி வினாத்தாளை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக