திங்கள், 17 டிசம்பர், 2012

இலங்கைக்கான கடனை சீனா நிறுத்தி வைத்துள்ளது

நீர் மின்சாரத் திட்டத்துக்காக இலங்கைக்கு வழங்கவிருந்த 8.9 பில்லியன் ரூபாய்கள் கடனை சீனா நிறுத்தி வைத்துள்ளது.சீனாவின் காப்புறுதி நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் காப்புறுதிக் கட்டணமாக செலுத்தவுள்ள 627 மில்லியன் ரூபாய்கள் செலுத்தப்படும் வரை இந்தக்கடனை சீன அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது.

சீனாவின், தேசிய மின்சாரத்துறை உபகரணக் கூட்டுத்தாபனம், அங்குள்ள வங்கி ஒன்றின் ஊடாக, களனி கங்கை நீர்மின்சார திட்டத்துக்காக 69,723,605,35 டொலர்களை இலங்கைக்கு வழங்க உறுதியளித்தது.

எனினும் இதனை வழங்குதன் முன்னர் இலங்கை அரசாங்கம், குறித்த தொகையில் 7 வீதமான 627 மில்லியன் ரூபாய்களை காப்புறுதிக் கட்டணமாக சீன காப்புறுதி நிறுவனத்துக்கு செலுத்தவேண்டும் என்றும் கோரியது.

இந்தநிலையில் குறித்த காப்புறுதி தொகை செலுத்தப்பட்டால் மாத்திரமே கடன்தொகையை விடுவிக்க முடியும் என்று சீன அரசாங்கம் இலங்கைக்கு அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக