வியாழன், 13 டிசம்பர், 2012

தமது விடுதலையை எதிர்பார்த்து மாணவ பிரதிநிதிகள் கந்தன்கடுவ தடுப்பு முகாமில் காத்திருக்கின்றனர்-விஞ்ஞான பீடாதிபதி

தமது விடுதலையை விரைவு படுத்தப்படுவதை எதிர் பார்த்தபடி பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் நால்வரும் வெலிக்கந்தவை அடுத்துள்ள கந்தன்கடுவ என்ற இடத்திலுள்ள திறந்தவெளி தடுப்பு முகாமில் காத்திருக்கின்றனர் என அவர்களை நேற்று நேரில் பார்வையிட்ட விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

விடுதலையை விரைவு படுத்துங்கள் என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது எனவும் பேராசிரியர் கூறினார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்தவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் அவர்களின் பெற்றோரும், பல்கலைக்கழக பேராசிரியர்களும்பார்வையிட்டுள்ளனர்.

இரண்டு மணி நேரம் மாணவர்களுடன் இருப்பதற்குத் தாம் அனுமதிக்கப்பட்டனர் என்று பெற்றோரும் பேராசிரியர்களும் தெரிவித்தனர்.

பேராசிரியர்களான புஸ்பரட்ணம், எஸ். ஸ்ரீ சற்குணராஜா மற்றும் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் கே. கந்தசாமி ஆகியோரே மாணவர்களைப் பார்வையிட்டனர். மாணவர்களின் பெற்றோரும் அவர்களுடன் சென்றிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், செயலாளர் ப.தர்ஷானந், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயந்த் மற்றும் விஞ்ஞான பீட மாணவன் சொலமன் ஆகியோரே தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக