செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஐ.தே.க வின் 18 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

ஐ.தே.க வின் 18 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குஐக்கிய தேசியக் கட்சியின் 18 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 18 ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என கட்சியின் பொதுச் செயலாளர் குறித்த உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோரிக்கையை உதாசீனம் செய்து, குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.உச்ச நீதிமன்றின் தீர்ப்பை சில ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உதாசீனம் செய்துள்ளதாக லக்ஸ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக