கிழக்கில் பிறந்த காரணத்தினாலோ பிறந்த காரணத்தினாலோ பரீட்சையில் தோற்ற காரணத்தினாலோ யாரையும் இந்த தாய் நாட்டில் இரண்டாம் பிரஜையாக கொள்ள நாங்கள் இடமளிக்கமாட்டோம் என இளைஞர் விவகார திறன் அபிவிருத்தியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கல்வியை பூர்த்திசெய்து தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி மாபெரும் இரண்டாம் நிலை தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சும் இலங்கை தேசிய மனித வள அபிவிருத்திச்சபையும் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடுசெய்தன.
இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு வின்சட் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (24) காலை இடம்பெற்றது.
இலங்கை தேசிய மனித வள அபிவிருத்தி சபையின் தவிசாளர் விஜய விக்ரமரட்ன தலைமையில் ஆரம்பமான இந்த கருத்தரங்கில் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கா.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய வற்றில் கற்று பல்கலைக்கழகம் செல்லதோர் மற்றும் உயர்தர அனுமதி கிடைக்காத சுமார் 600 இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.
சான்றிதழ் கற்கை நெறி தொடக்கம் பட்டப்படிப்பு வரையில் இரண்டாம் தர கற்கைகள் ஊடாக இளைஞர் யுவதிகளின் ஆளுமையை விருத்திசெய்து அவர்களை சிறந்த தொழில் துறைக்குள் கொண்டுசெல்லும் வகையிலான கருத்தரங்காக இது அமைந்துள்ளது.
ஆத்துடன் இதன்போது பல்வேறு துறைசார்ந்த தொழில் வழிகாட்டல்களும் மேற்கொள்ளும் வகையில் தொழில்சார் நிபுணர்கள் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக