வெள்ளி, 25 ஜனவரி, 2013

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு அளிக்கப்பட்ட வாக்குகள் நிட்டம்புவ பிரதேசத்தில் மீட்பு

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு அளிக்கப்பட்ட வாக்குகள் நிட்டம்புவ பிரதேசத்தில் மீட்பு2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அளிக்கப்பட்ட வாக்குகள், நிட்டம்புவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளன.நிட்டம்புவ கலகெடஹேன என்ற இடத்தில் இவ்வாறு வாக்குச் சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 600 வாக்குச் சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தக் வாக்குச் சீட்டுக்கள் நுவரெலியா மாவட்டத்திற்கு சொந்தமானவை என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் தேர்தல் திணைக்களம் விசாரணைகளை நடாத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவை உண்மையான வாக்குச் சீட்டுக்களா என்பது குறித்து முதலில் விசாரணை நடாத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக