திங்கள், 14 ஜனவரி, 2013

முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் 44 வது பிரதம நீதியரசராக நாளைய தினம் நியமணம்?

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட உள்ள தெரியவருகிறது.
முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ்  44 வது பிரதம நீதியரசராக நாளைய தினம் நியமனம்?
இதனடிப்படையில் மொஹான் பீரிஸ் இலங்கையின் 44 வது பிரதம நீதியரசராக நாளைய தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதம நீதியரசர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவரை தெரிவுசெய்வதற்காக சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ தலைமையில், நாடாளுமன்ற பேரவைக் கூடவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக