இலங்கையில் தமிழர்களுக்கு இனியும் அவலம் ஏற்படக்கூடாது. எனவே எதிர்காலத் தமிழ்ச் சந்ததியினரைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். மலேசியாவில், பெட்டாலிங் தோட்ட மாளிகையில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் அதிதியாகக் கலந்துகொண்டு அன்வர் இப்ராஹிம் உரையாற்றினார். இலங்கைத் தமிழர்களின் இன்னல் தீர உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். தமது எதிர்கால தமிழினச் சந்ததியினரைப் பாதுகாக்க முழுமூச்சாகக் களமிறங்க வேண்டும் எனவும் இப்ராஹிம் இதன்போது அழைப்பு விடுத்தார்தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
செவ்வாய், 1 ஜனவரி, 2013
இலங்கையில் தமிழர்களுக்கு இனியும் அவலம் ஏற்படக்கூடாது; எதிர்கால தமிழ்ச் சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும் - மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கையில் தமிழர்களுக்கு இனியும் அவலம் ஏற்படக்கூடாது. எனவே எதிர்காலத் தமிழ்ச் சந்ததியினரைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். மலேசியாவில், பெட்டாலிங் தோட்ட மாளிகையில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் அதிதியாகக் கலந்துகொண்டு அன்வர் இப்ராஹிம் உரையாற்றினார். இலங்கைத் தமிழர்களின் இன்னல் தீர உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். தமது எதிர்கால தமிழினச் சந்ததியினரைப் பாதுகாக்க முழுமூச்சாகக் களமிறங்க வேண்டும் எனவும் இப்ராஹிம் இதன்போது அழைப்பு விடுத்தார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக