புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் போது, இதற்காக விண்ணப்பிக்கும் சம்பந்தப்பட்ட நபர்களைக் குழுவொன்றின் முன்னிலையில் அழைத்து முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டுமென இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.குறித்த நபரின் பின்னணி தொடர்பில் விரிவான விசாரணையும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.1980ம் ஆண்டிற்குப் பின்னரான காலப் பகுதியில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரிச் சென்றவர்கள் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.இவ்வாறு சென்றவர்களில் பெரும்பாலானோர் கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளின் பிரஜா உரிமை பெற்றவர்களாக உள்ளனர்.இதேவேளை, 2009 யுத்த முடிவுக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.இவ்வாறானவர்கள் இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்கும் போது இவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.இதற்காகக் குடியுரிமைச் சட்டங்களிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்றும் கோதா தெரிவித்துள்ளார்தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
செவ்வாய், 1 ஜனவரி, 2013
இரட்டை பிரஜாவுரிமை பெறுவோர் மீது விசாரணை நடத்த வேண்டும்! கோத்தா
புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் போது, இதற்காக விண்ணப்பிக்கும் சம்பந்தப்பட்ட நபர்களைக் குழுவொன்றின் முன்னிலையில் அழைத்து முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டுமென இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.குறித்த நபரின் பின்னணி தொடர்பில் விரிவான விசாரணையும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.1980ம் ஆண்டிற்குப் பின்னரான காலப் பகுதியில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரிச் சென்றவர்கள் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.இவ்வாறு சென்றவர்களில் பெரும்பாலானோர் கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளின் பிரஜா உரிமை பெற்றவர்களாக உள்ளனர்.இதேவேளை, 2009 யுத்த முடிவுக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.இவ்வாறானவர்கள் இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்கும் போது இவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.இதற்காகக் குடியுரிமைச் சட்டங்களிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்றும் கோதா தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக