சனி, 12 ஜனவரி, 2013

வெளிநாடுகளில் இருந்து வரும் பெண் தொழிலாளர்களுக்கு சவுதியில் பாதுகாப்பு இல்லை்; ரிசானாவை சிரச்சேதம் செய்ததற்கு பான் கீ மூன் கண்டனம்!

News Serviceஇலங்கை பணிப்பெண் ரிசானா நபீக், குழந்தையை கொன்றதாக குற்றம்சாட்டி சவுதியில் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ரிசானா நபீக் மீது குற்றம் சுமத்தப்பட்டமை மற்றும் அவர் மீது தடுத்து வைத்து நடவடிக்கை எடுத்தமைக்கு பான் கீ மூன் தனது கவலையை தெரிவித்துள்ளார். அத்துடன் சவுதி அரேபியாவில் மரண தண்டனை பயன்பாடு அதிகரித்துச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து ஆண், பெண்கள் அவர்களின் குடியேற்றம் தேசியநிலை என்பன கருத்திற் கொள்ளப்பட்டு சர்வதேச சட்டத்தின் கீழ் நியாயமாக நடாத்தப்பட வேண்டும் என பான் கீ மூன் கூறியுள்ளார். சவுதி அரேபியாவில் தற்போது பெண்களுக்கு நீதிமன்றங்களை சமமாக அணுகும் அல்லது நீதி பெற சமமான வாய்ப்பு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் பெண் தொழிலாளர்களுக்கு சவுதியில் பாதுகாப்பு இல்லாததை இட்டு பான் கீ மூன் கவலை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக