நீதிமன்றம், அரசியல் அமைப்பு, பாராளுமன்றம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அமைச்சர் டி.யு.குணசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் எந்த ஜனாதிபதி அதிகாரத்தில் அமர்ந்தாலும் எவரை பிதம நீதியரசராக நியமித்தாலும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் குற்றப்பிரேரணை விடயத்தில் இலங்கை கம்யூனிஸ கட்சி என்ற அடிப்படையில் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அமைச்சர் டி.யு.குணசேகர கூறினார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்த நீதிமன்றம், பாராளுமன்றம், அரசியல் யாப்பு என்பவற்றின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றின் மீயுயர் தன்மையும் நிதிமன்றின் சுயாதீனமும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அதன் பொறுப்பை பாராளுமன்றம் மீறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக