புதன், 16 ஜனவரி, 2013

அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்தவாரம் புதுடில்லிக்குப் பயணம்

News Serviceசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்தவாரம் புதுடில்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் இந்திய அரசினால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இந்திய - சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்திலும் பீரிஸ் பங்கேற்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா குழுவுக்கு ஜி.எல்.பீரிசும், இந்தியக் குழுவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தும் தலைமை வகிக்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக